காதலிக்கு ஐ போன் வாங்க செயின் பறிப்பில் ஈடுப்பட்ட காதலன்... போலீசாரிடம் சிக்கியது எப்படி?
காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசாக வாங்க பணம் தேவைப்பட்டதால், சென்னை முழுவதும் முகத்தை மறைத்து சுற்றி செயின் பறிப்பில் ஈடுபட்ட 24 வயது இளைஞரை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்துள்ளனர்.
செயின் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாக வைத்து வெளியான படம் மெட்ரோ. இதில் இளைஞர்கள் உல்லாசமாக இருப்பது மற்றும் காதலிகளுக்கு விலை உயர்ந்த பரிசு வாங்கி கொடுப்பதற்கு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவார்கள் அது போன்ற ஒரு சம்பவம் சென்னை அமைந்தகரை பகுதியில் இரவில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகளை பைக்கில் அழைத்துச் சென்றபோது மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தாய் ஒருவர் சென்னை டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறிப்பாக கடந்த 24ஆம் தேதி
இதனையடுத்து கீழ்பாக்கம் துணை ஆணையர் கீழ் உள்ள போலீசார் விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது வெள்ளை கர்சிப் அணிந்து கொண்டு மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டது உறுதியானது.
இருப்பினும் அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளை பார்க்கும் பொழுது சிக்காமல் இருப்பதற்காக தொடர்ந்து முகமூடியை கழட்டாமலேயே செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடன் சுற்றி திரிந்தது தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் செயின் பறிப்பு திருடனை கண்டுபிடிக்க முடியாத சூழல் போலீசாருக்கு ஏற்பட்டது. குறிப்பாக செயின்பறிப்பு திருடன் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டுகள் இல்லாமல் போலீசில் சிக்காமல் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் திருடனை கண்டுபிடிப்பதற்கு சவாலாக அமைந்தது. மேலும் ஏற்கனவே இந்த முறையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் போனது.
இருப்பினும் செயின் பறிப்பு திருடன் வரிக்குதிரை உடம்பில் இருப்பது போன்ற கோடு போட்ட சட்டையை அணிந்திருப்பதை மட்டும் அடையாளமாக வைத்துக் கொண்டு சம்பவம் நடந்த நேரத்திற்கு முன்னால் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போதும் தொடர்ந்து முகத்தில் கர்சிப் அணிந்து கொண்டு போலீசில் சிக்காமல் இருப்பதற்காக சென்னையில் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட திருடனை விசாரித்த போது சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் அண்ணா சாலையில் உள்ள பிரபல மாலில் துணிக்கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது. செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தான் ஒரு பெண்ணை காதலிப்பது ஆகவும் அவருக்கு அடுத்த வாரத்தில் பிறந்த நாள் வர இருக்கிற காரணத்தினால் ஐபோன் பரிசாக வழங்க திட்டமிட்டதாக கூறியுள்ளார். அதற்கு பல இடத்தில் காசு கேட்டும் கடனாக கிடைக்காத காரணத்தினால், செயின் பறிப்பில் ஈடுபட்டால் மட்டுமே ஒரே நேரத்தில் அவ்வளவு தொகை கிடைக்கும் என செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
What's Your Reaction?