நகை வாங்குவோருக்கு ஷாக்....வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை...!

இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Jul 27, 2026 - 10:19
நகை வாங்குவோருக்கு ஷாக்....வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை...!
Gold Price

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தை மட்டுமே சந்தித்து வந்தது. இது நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வியாழன் கிழமை மட்டும் சவரனுக்கு ரூ 2,160 குறைந்த  தங்கம் விலை அதன் பிறகு ஏற்றத்தை மட்டுமே  சந்தித்தது.

நேற்றைய (26,07,2026)  நிலவரப்படி , சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,06,400 க்கும், கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,370க்கும் விற்பனையானது.

இந்நிலையில் வார தொடக்கத்திலே இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,06,960க்கும், கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,370க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ 240 க்கும் , ஒரு கிலோ ரூ 2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow