மியாமி ஓபன் தொடரில் சின்னர், காலின்ஸ் சாம்பியன் - போபன்னா - மேத்யூ மீண்டும் ஒரு கோப்பையை வென்று அசத்தல் !
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியரான போபண்ணா, மேத்யூவுடன் இணைந்து கோப்பையை வென்று அசத்தினார்.
கோலாகலமாக நடந்த முடிந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சின்னரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் டேனியல் காலின்சும், சாம்பியன் பட்டம் வென்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியரான போபண்ணா, மேத்யூவுடன் இணைந்து கோப்பையை வென்று அசத்தினார்.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இத்தாலிய வீரரான சின்னரும் - பல்கேரிய நாட்டு வீரரான டிமிட்ரோவ்வும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னர், 6-3, 6-1 ஒன்ற நேர்செட் கணக்கில் டிமிட்ரோவை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இவர், இத்துடன் ஒரு ஆஸ்திரேலிய ஓபன் உள்பட 13 ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஸ்ஷிப் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கு பின்னர், உலக டென்னிஸ் தரவரிசையில், சின்னர் 2-வது இடத்துக்கும், டிமிட்ரோவ் 3-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். முதலிடத்தில், நோவோக் ஜோகோவிக் உள்ளார்.
இதேபோல், மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 53வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், தரவரிசையில் 4அவது இடத்தில் இருக்கும் ரைபாகினாவை எதிர்கொண்டார். 2 மணி நேரம் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், காலின்ஸ், 7-5, 6-3 என்ற நேர்செட்களில் ரைபாகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
முன்னதாக நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் எட்பன் இணை, இந்தாண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று அசத்தியது. அந்த போட்டியின் மூலம் அதிக வயதில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையை ரோகன் பெற்றார். அதைத் தொடர்ந்து, தற்போது இதே ஜோடி, மியாமி ஓபனிலும் சிறப்பாக விளையாடி வந்தனர். இந்நிலையில், இறுதிப்போட்டியில், குரோஷிய நாட்டு வீரர் டாடிக் - அமெரிக்க வீரர் கிராஜிசெக் இணையை எதிர்கொண்டனர். இதில், 6-7, 6-3, 10-6 என்ற நேர்செட் கணக்கில் வென்று போபண்ணா- எட்பன் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
What's Your Reaction?