போகியால் புகைமூட்டமான தலைநகர் சென்னை: 9 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
போகி பண்டிகையையொட்டி சென்னையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. புகை மூட்டம் காரணமாக 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதி உள்ளாகியுள்ளனர்.
போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்கள் கொளுத்தப்பட்டன. இதனால். கும்மிடிப்பூண்டி - 196, மணலி - 144, கொடுங்கையூர்- 123, அரும்பாக்கம் - 177, காந்தி நகர்(எண்ணூர்) - 144, பெருங்குடி - 103, வேளச்சேரி - 76, ராயபுரத்தில் - 64 காற்றில் மாசு ஏற்பட்டுள்ளது.
போகி பண்டிகையால் மீனம்பாக்கம், கவுல் பஜாா், பொழிச்சலூா், பம்மல் அனகாபுத்தூா் உள்பட சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் பழைய பொருள்களை எரித்த போது கடும்புகை மூட்டத்தால், ஓடுபாதை முற்றிலும் மறைக்கப்பட்டது.
இதனால்,அதிகாலை முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 9 விமானங்கள் ரத்து செய்யப்படுவதுடன், சில விமானங்கள் காலதாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகை காரணமாக மக்கள் வேண்டாத பழைய பொருட்களை எரித்து வருவதால் சென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.
திருப்பதியில் போகி பண்டிகை
இன்று அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏகாந்த சேவைக்கு பிறகு மூலவர் சன்னதி கதவுகள் மூடிய பின்னர் கோயில் முன்பு கட்டைகள் வைத்து போகி தீ மூட்டி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்களுடன் இணைந்து போகி தீயிட்டு எரித்தனர். இதேபோன்று வைபவ உற்சவம் மண்டபம் எதிரில் போகி தீயிட்டு கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வேண்டும் என வேண்டி கொண்டனர்.
What's Your Reaction?

