தமிழ்நாடு தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகம்... சுயேட்சைகள் வெற்றிபெற முடியாது... -அண்ணாமலை பேட்டி
தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாகவும், அதேசமயம் சவாலாகவும் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாகவும், அதேசமயம் சவாலாகவும் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது "பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தது எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மீண்டும், சேலம், கோவைக்கு வருவது எங்களுக்கு மேலும் உற்சாகம் தரும். தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல்களம் பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறது என்றாலும், எங்களுக்கு சவால் இருப்பது உண்மை தான். எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
மேலும், பாஜக தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. மனுத்தாக்கல் உள்ளிட்ட மேலும் சிலவற்றை சேர்த்து வைத்துப் பார்த்தால், தேர்தல் பிரசாரத்துக்கு 18 நாட்கள் தான் இருக்கிறது. வரும் தேர்தல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் சவாலான ஒன்று. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்யும்போது விளவங்கோடு தொகுதிக்கும் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, கூட்டணி உறுதி செய்யப்பட்டு 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் தேர்தல் செலவுகள் அதிகம். சுயேட்சைகள் இங்கு வெற்றிபெறவே முடியாது. பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான் என்று அண்ணாமலை கூறினார்.
What's Your Reaction?