”விஜய் ரசிகர்களின் ரவுடித்தனம்” ?  இயக்குநர் சுதா கொங்கரா கொந்தளிப்பு 

பராசக்தி திரைப்படம் குறித்து தரக்குறைவாக விமர்சிப்பதாகவும், விஜய் ரசிகர்கள் அவதூறு பரப்புவதாகவும் இயக்குநர் சுதா கொங்கரா கடுமையாக பதிவிட்டுள்ளார். 

”விஜய் ரசிகர்களின் ரவுடித்தனம்” ?  இயக்குநர் சுதா கொங்கரா கொந்தளிப்பு 
Director Sudha Kongara in turmoil

பொங்கலையொட்டி ஜனவரி 9 ஆம் தேதி விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் வருவதாக இருந்தது. அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்த பராசக்தி திரைப்படமும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான காரணங்களால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவில்லை. அதேசமயம், இந்தி திணிப்புக்கு எதிராக 1960 களில் நடந்த போராட்டங்கள் குறித்து எடுக்கப்பட்ட பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பட வசூலிலும் பராசக்தி சாதனை படைத்து வருகிறது. 

இந்த நிலையில் தான், பராசக்தி திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, ’தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா’ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டி ஒன்றில், விஜய் ரசிகர் ஒருவரின் சமூக வலைதளப் பதிவை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.

ஒரு படத்திற்கு எதிராக பெயர் தெரியாத ஐடி-களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்பி வருகிறார்கள். இந்த மாதிரியான, ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டியிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow