2024ஆம் ஆண்டின் முழு சூரிய கிரகணம்.. ஏப்.8ல் வாணவேடிக்கை இந்தியாவில் தெரியுமா?.. லீவு விட்ட அமெரிக்கா

2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் முழு சூரிய கிரகணமாக நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழ உள்ளதால் இங்கு காணமுடியாது. வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் நயாகராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது நயாகராவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Apr 5, 2024 - 17:52
Apr 5, 2024 - 19:16
2024ஆம் ஆண்டின் முழு சூரிய கிரகணம்.. ஏப்.8ல் வாணவேடிக்கை இந்தியாவில் தெரியுமா?.. லீவு விட்ட அமெரிக்கா

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. பங்குனி அமாவாசை நாளில் ராகு கிரஹஸ்த சூரிய கிரகணம் ரேவதி நட்சத்திரத்தில் நிகழப்போகிறது. இந்த வானியல் அதிசயம் இந்தியாவில் தெரியாவிட்டாலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

வட அமெரிக்கா முழுவதும் தெரியும். இந்த நிகழ்வு சுமார் 1000 கிலோ மீட்டர் வரை தெரியும். இந்நிலையில் வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் நயாகராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1979ஆம் ஆண்டுக்கு பிறகு நயாகராவில் சூரிய கிரகணம் தென்பட உள்ளதால் லட்சக்கணக்காக மக்கள் அங்கு குவிய வாப்புள்ளது. இதன் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நயாகரா, கனடாவில் தெற்கு ஒன்டாரியோவில் அமைந்துள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சி உலக புகழ்பெற்றது. வரும் 8 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில், அது நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபளிக்கும். இந்த அபூர்வ நிகழ்வைக் காண ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிய வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அவசர நிலை அறிவித்துள்ளதாக நயாகரா பிராந்தியத் தலைவர் ஜிம் பிராட்லி தெரிவித்துள்ளார்.

நாசாவின் கூற்றுப்படி, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவைக் கடந்து, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவைக் கடந்து செல்லும்.  இது தெற்கு பசிபிக் பெருங்கடலில் தொடங்கும். 

சூரிய கிரகணத்தின் அன்று லட்சக்கணக்கான மக்கள் நயாகரா நீர்வீழ்ச்சியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய மொபைல் போன், நெட்வொர்க், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரகணம் நிகழும் முன்பாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

சூரிய கிரகணத்தை முன்னிட்டு நயாகராவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை பின்பற்றவும், சூரிய கிரணத்தை சாலையில் நின்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து அதற்கு உரிய கண்ணாடிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow