நீட் தேர்வு இல்லைன்னு சொல்லுமா காங்கிரஸ்?... 65 வருசமாக என்ன பண்ணாங்க? - கொந்தளித்த குஷ்பு

Apr 5, 2024 - 17:44
நீட் தேர்வு இல்லைன்னு சொல்லுமா காங்கிரஸ்?... 65 வருசமாக என்ன பண்ணாங்க? - கொந்தளித்த குஷ்பு

மாநிலங்கள் விருப்பப்பட்டால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள காங்கிரசால், நீட் தேர்வு இல்லை என்று சொல்ல முடியுமா? என பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு சவால் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நீட் மற்றும் கியூட் தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம் என வாக்குறுதி அளித்துள்ளது. நீட் தேர்வு விலக்கிற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அறிவிப்புக்கு திமுக உட்பட பல்வேறு கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரசின் வாக்குறுதி தொடர்பாக நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "நீட் தேர்வை  மாநிலங்களில் இருந்து எடுக்க முடியாது என உச்சநீதிமன்ற வாசலில் இருந்து கத்தி பேசியவர் நளினி சிதம்பரம். அவரை திமுகவினர் கண்டித்து ஏன் கேள்வி கேட்கவில்லை?. 

நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டதே காங்கிரஸ்தான். மாநிலங்கள் விருப்பப்பட்டால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்று கூறும் காங்கிரஸ், நீட் தேர்வு இல்லை என்று கூற முடியுமா?. உச்சநீதிமன்ற உத்தரவை எப்படி மாற்ற முடியும்?. விருப்பப்பட்ட மாநிலங்கள் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றால் அதற்கு உச்சநீதிமன்றம் தான் செல்ல வேண்டும். ஆனால், மக்களை ஏமாற்றுவதற்காகவும் தேர்தல் எது கூறினாலும் நம்பிடுவார்கள் என்று நினைக்கக் கூடாது என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய குஷ்பு, "65 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது?. மக்களை திசை திருப்பவும் தங்கள் நலனுக்காக நாடு எப்படி போனால் என்ன என்பதுபோல் தான் செய்து கொண்டிருந்தது. தமிழ்நாடு முன்னேற வேண்டும் என நினைக்கிறோம். அதற்காக தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்" எனவும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow