அச்சுறுத்தும் சீனா...  அமெரிக்காவின் பதிலடி..

அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், பல்வேறு பொருளாதார பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதன் அதிகாரிகளை குறிவைத்துள்ள, சீன அரசின் உதவியுடன் செயல்படும் அச்சுறுத்தல் குழுவான APT31-க்கு எதிராக, அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

Mar 26, 2024 - 08:52
அச்சுறுத்தும் சீனா...  அமெரிக்காவின் பதிலடி..

இது தொடர்பாக சீனாவை சேர்ந்த நி காபின், வெங் மிங், செங் ஃபெங், பெங் யாவோன், சன் சியோஹூய், சியாங் வாங் மற்றும் ஜாவோ குவாங்சாங் ஆகிய ஹேக்கர்கள் மீது, அமெரிக்காவிற்கு எதிரான குற்றத்தை செய்ய சதி செய்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதோடு, அமெரிக்காவின் உட்கட்டமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலைக் கொடுக்கும் இணைய நடவடிக்கைகளை கண்காணிக்க, ஜாவோ, நி மற்றும் வுஹான் ஷியாருயிஷி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்க கருவூலத்துறை அனுமதி அளித்துள்ளது. 

சைபர் கிரைம் மூலம் தீங்கிழைக்கும் கும்பல் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் வரை வெகுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசின் உதவியுடன் செயல்படும் இந்த குழு, அமெரிக்க பாதுகாப்பு மற்றும் அரசு துறைகள் மற்றும் அமெரிக்க வணிகங்களின் அறிவுசார் சொத்து மற்றும் வர்த்தக ரகசியங்களை குறிவைத்திருப்பதாகவும், அவ்வாறு செய்பவர்களின் நடவடிக்கையை அமெரிக்கா முறியடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow