இயக்குநர் பாலா பலருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கார் - நடிகர் சிவகார்த்திகேயன்..!
பாலா இளைஞர்கள் மத்தியில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், அவரை போல் படம் எடுக்கணும்னு ஊர்ல இருந்து கிளம்பி வந்தவங்க நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பாலா சார் மாதிரி படம் எடுக்கணும்னு ஊர்ல இருந்து கிளம்பி வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்படியான தாக்காத்தை அவர் ஏற்படுத்தியிருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
வணங்கான் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசுகையில், சேது படம் வரும்போது எனக்கு 14 வயசு. அந்த படத்தின் க்ளைமேக்ஸ் பாதிப்பை கொடுத்தது. பாலா சார் படத்தை திரையரங்கத்துல பார்த்ததுலாம் இன்னைக்கு நெனச்சு பார்க்கிறேன்.
அமரன் படம் தீபாவளிக்கு வருகிறது நெகடிவ் எண்டிங் இருக்குனு சொல்லும்போது எல்லோரும் பிதாமகன் படம் தீபாவளிக்கு வந்து ஹிட்டடிச்சது. அவரை கொண்டாடுற நிகழ்வுல நான் இருப்பது பெருமை.
அவன் இவன் படத்தோட நிகழ்வை நான்தான் தொகுத்து வழங்குனேன். அந்த நிகழ்வை ரொம்ப பயந்து பயந்து பண்ணினேன். பாலா சார் மாதிரி படம் எடுக்கணும்னு ஊர்ல இருந்து கிளம்பி வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்படியான தாக்காத்தை அவர் ஏற்படுத்தியிருக்கார்.
அவருடைய திரைமொழி ரொம்ப தனித்துவமானது. அருண் விஜய் அண்ணன்தான் ' நீ கண்டிப்பா வரணும் தம்பி' என்று கூப்பிட்டார். அருண் விஜய் சார் எனக்கு ரொம்ப சீனியர். அவர் விட்டுக் கொடுக்காமல் முயற்சி பண்றதுதான் அவரோட உண்மையான வெற்றியாக பார்க்கிறேன். தம்பியாக இந்தப் படத்துக்கு அவரை வாழ்த்துறேன். பொங்கலுக்கு அஜித் சார் படம் வருது, வணங்கான் படமும் வரட்டும். ரெண்டு படமும் வெற்றி அடையும்.
What's Your Reaction?