தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை… கரூரில் பரபரப்பு!

கரூரில் குடும்ப பிரச்னை காரணமாக தலைமை காவலர் தூக்கிட்டு  தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை… கரூரில் பரபரப்பு!

 கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் வசித்து வந்த 46 வயதான அருள்குமார், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா மன்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அசிஸ்டெண்டாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி சச்சின், அஸ்வின் என்ற இரண்டு மகன்கள் உள்ளார். சத்தியமங்கலம் STF -ல் பணிபுரியும்  தலைமை காவலர் அருள்குமார் தற்செயல் விடுப்பில் தனது சொந்த ஊரான நொய்யல் குறுக்கு சாலைக்கு வந்துள்ளார். 

இந்த நிலையில், மனைவியுடன்  ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

அதனைப் பார்த்த அருள்குமாரின் மனைவி கிருத்திகா கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து கீழே இறக்கியுள்ளார். ஆனால் அவரை இறக்குவதற்குள் அருள்குமார் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow