மதுபோதையில் தகராறு: இளைஞர் அடித்துக் கொலை - 2பேர் கைது

Jan 2, 2024 - 15:48
Jan 2, 2024 - 15:51
மதுபோதையில் தகராறு: இளைஞர் அடித்துக் கொலை - 2பேர் கைது

தேவகோட்டையில் நள்ளிரவில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் -திருப்பத்தூர் சாலையில் கார் வாட்டர் வாஸ்  சர்வீஸ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் (25), நல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்த  பெரியசாமி (17)மற்றும் சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்த தமிழ் அழகன் (25) ஆகியோர் பணி செய்து வந்தனர். 

இந்நிலையில்,நேற்று இரவு மூன்று பேரும் மது குடித்துக்கொண்டிருந்தபோது, இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு அடிதடியாக மாறி ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.இதில் ஜெகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை அறியாமல் பெரியசாமியும் தமிழழகனும் மதுபோதையில் அங்கேயே படுத்து உறங்கியுள்ளனர்.காலையில் அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து, தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், நகர் காவல் ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை ஆகியோர் சம்பவ இடம் வந்து, இறந்த ஜெகநாதனின் உடலை மீட்டு, தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பெரியசாமி, தமிழ்அழகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow