திருத்துறைப்பூண்டி: மினி லாரி மோதி பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர் பலி
எடையூர் காவல் நிலைய போலீசார் பாலசுப்பிரமணியன் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்தவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பாண்டிசத்திரம் பகுதியில் இன்று காலை நாகப்பட்டினம் பகுதியில் இருந்து மீன் ஏற்றியக்கொண்டு மினி லாரி பட்டுக்கோட்டை நோக்கி சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதியது.
இதில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த செம்பியமங்களம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மீது வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடையூர் காவல் நிலைய போலீசார் பாலசுப்பிரமணியன் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.விபத்துக்கு காரணமாக இருந்த காரைக்குடியை சேர்ந்த ஓட்டுநர் முருகன் (28 )என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?