சூர்யா 45 பட அறிவிப்பு வெளியானது
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறது அவரது 45வது படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
                                    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கிற இப்படத்துக்கு அடுத்ததாக சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் அவரது 44வது படத்தை நடித்து முடித்திருக்கிறார். அதன் படப்பிடிப்பு நிறைவடைந்த வேளையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. இறுதியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பெருவெற்றி பெற்றது. ஆகவே சூர்யா படமும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்துக்கு அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் படத்தினை அடுத்து இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணையப் போகிறார் என்கிற தகவல் வெளியான போது இயக்குநர் சுதா கொங்காராவுடன் சூரரைப் போற்றுக்கு அடுத்து ஒரு படம் சூர்யா இணையவிருக்கிறார் என்கிற தகவல் வெளியானது.
இப்படியான சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யாவின் 45-வது படத்தை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கவிருப்பதாகவும் இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            