TVK Vijay: ”சாகசத்துல இதெல்லாம் சகஜம்... I’ll come back.. எல்லாம் விஜய்க்காக தான்” பஞ்சாயத்து ஓவர்!

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவனின் கையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அந்தச் சிறுவன் செய்தியாளர்களிடம் விளக்கம் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

Jun 22, 2024 - 16:00
TVK Vijay: ”சாகசத்துல இதெல்லாம் சகஜம்... I’ll come back.. எல்லாம் விஜய்க்காக தான்” பஞ்சாயத்து ஓவர்!

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விஜய்யின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரம் காரணமாக, தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், தவெக நிர்வாகிகள் தலைவர் விஜய்யின் பிறந்தநாளை விதவிதமாக கொண்டாடி வருகின்றனர். அப்படி சென்னை நீலாங்கரையில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், சிறுவனின் கையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  

சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து சாகசம் செய்ய முயற்சித்தனர். ஆனால், அந்தச் சிறுவனின் கையில் தீ வேகமாக பரவியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க முயற்சி செய்தவர்கள் மீதும் தீ வேகமாக பரவியது. இதனையடுத்து கிருஷ்வா என்ற அந்தச் சிறுவன் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈ.சி.ஆர். சரவணன் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தான் இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது. மயிலாப்பூரைச் சேர்ந்த கஜபதி - பிரியா தம்பதியின் மகனான இதுவரை 15 உலக சாதனைகள் வரை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் விஜய்யின் பிறந்தநாள் விழாவில் அந்தச் சிறுவனின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிலம்பம், ஸ்கேட்டிங், வாள் சுற்றுதல் என சாகசங்கள் செய்த கிருஷ்வா, இறுதியாக தீ எரியும் ஓடுகளை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து பேசிய சிறுவன் கிருஷ்வாவின் தயார், என் மகனுக்கு சிறிய காயம் தான் ஏற்பட்டது, ஆனால் தற்போது நன்றாக இருப்பதாகவும், இதுபோன்ற பல சாகசங்கள் செய்துள்ளதாக கூறினார். மேலும், தனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும், அதனால் எனக்காகவே இந்த சாகசங்கள் செய்ய எனது மகன் கிருஷ்வா சம்மதித்தார். தீ விபத்து கூட என பெரிதாக பயம் கொடுக்கவில்லை. ஆனால் அந்த வீடியோ ட்ரெண்டானது தான் பயமாக இருக்கிறது. நாங்களாக விரும்பியே இந்நிகழ்ச்சிக்கு வந்தோம், எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என கூறினார்.  

அவரைத் தொடர்ந்து பேசிய சிறுவன் கிருஷ்வா, இதுவரை 15 உலக சாதனைகள் செய்துள்ளேன், இந்த முறை ஸ்பார்க் ஆகியதால் தீப்பற்றியது. சாகசங்கள் செய்யும் போது இதெல்லாம் சகஜம் தான், I’ll Come back. இதற்கு முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் இப்படி சாகசங்கள் செய்வது வழக்கம். இன்னும் தொடர்ந்து பல சாகசங்கள் செய்வேன் என தைரியமாக பேசினார். இருப்பினும் சிறுவனின் கையில் தீ விபத்து ஏற்பட்டதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம் என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow