Senjamar: இலங்கை இறுதிப் போரில் தொலைந்த தமிழர்கள்… உண்மையை பேச வரும் செஞ்சமர்!

இலங்கை இறுதிப் போரில் தமிழர்களுக்கு நடந்த துயரங்களை பின்னணியாக வைத்து உருவாகி வருகிறது செஞ்சமர் திரைப்படம்.

Mar 21, 2024 - 14:39
Mar 21, 2024 - 20:18
Senjamar: இலங்கை இறுதிப் போரில் தொலைந்த தமிழர்கள்… உண்மையை பேச வரும் செஞ்சமர்!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் யுத்த களத்தில் நின்று போராடிய "பிரிக்கேட் இயர்" பால்ராஜ், தமிழினி இருவரையும் பின்னணியாக வைத்து உருவாகி வருகிறது செஞ்சமர் திரைப்படம். இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போருக்கு பின் தொலைந்து போன தமிழர்கள் இதுவரை என்ன ஆனார்கள் என்று தெரிவில்லை. அவர்கள் திரும்பி வருவார்களா, வரமாட்டார்களா..? என்ற ஆய்வு மேற்கொள்ள இலங்கைக்குள் ஐ.நா போக வேண்டுமா? வேண்டாமா? என்ற போராட்டத்தோடு இப்படத்தின் கதைகளம் துவங்குகிறது.  

இந்த இறுதி போருக்கு முன்னால் தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளின் வாழ்க்கை போராட்டம் எப்படி இருந்தது என்பதை இந்த படம் எடுத்து விளக்குகிறது. செஞ்சமர் படத்தை அதிரை தமீம் அன்சாரி இயக்க, மெய் மறந்தேன், சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, வாடி ராசாத்தி முதலிய படங்களை தயாரித்த C.G.M பிக்சர்ஸ் மணிவண்ணன் தயாரிக்கிறார். ஜெகநாதன், முருகன், பகலவன், குட்டி ராதிகா போன்ற புதுமுகங்களுடன் சாக்ஷி அகர்வால், மைம் கோபி, ரஞ்சன், கீர்த்தனா, விஷ்வா, சதீஷ் மாஸ்டர், சஞ்சய் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் செஞ்சமர் படத்தின் ஷூட்டிங் கடந்த 20 நாட்களாக செங்கல்பட்டு, வையம்பட்டி போன்ற இடங்களில் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow