வெற்றிமாறன் உதவி இயக்குநருடன் இணைகிறாரா கார்த்தி..? அடுத்த டாணாக்காரன் சம்பவம் ரெடியாகுமா..?

கார்த்தியின் புதிய படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Mar 2, 2024 - 18:04
வெற்றிமாறன் உதவி இயக்குநருடன் இணைகிறாரா கார்த்தி..? அடுத்த டாணாக்காரன் சம்பவம் ரெடியாகுமா..?

சென்னை: கார்த்தியின் 25வது படமாக வெளியான ஜப்பான் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இதனால் தனது அடுத்த படங்களின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இனி வெளியாகும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடிக்க வேண்டும் என்பதில் கார்த்தி உறுதியாக உள்ளார். இதனால் கதைகளை தேர்ந்தெடுப்பதிலும் இயக்குநர்கள் யார் என முடிவு செய்வதிலும் கார்த்தி ரொம்பவே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஒரே நேரத்தில் மெய்யழகன், வா வாத்தியாரே என இரண்டு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து சர்தார் 2, தீரன் அதிகாரம் 2, கைதி 2 ஆகிய படங்கள் கார்த்தியின் லைன்-அப்பில் உள்ளன. இந்த வரிசையில் கார்த்தியின் புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்து டாணாக்காரன் படம் இயக்குநராக அறிமுகமானவர் தமிழ். விக்ரம் பிரபு, எம்.எஸ் பாஸ்கர், லால் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான டாணாக்காரனுக்கு ஓடிடியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் தசெ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்திலும் போலீஸ் கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார் தமிழ். அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். அதேநேரம் தனது அடுத்தப் படத்துக்கான கதையையும் ரெடி செய்துள்ள தமிழ், அதனை கார்த்தியிடம் கூறியுள்ளாராம். இயக்குநர் தமிழ் சொன்ன கதைக்கு கார்த்தி சம்மதம் கூறினாரா என்பது தெரியவில்லை. 

அப்படி ஓக்கே சொன்னால் கார்த்தி, தமிழ் கூட்டணியில் உருவாகும் படம் அடுத்த  டாணாக்காரனாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம் கார்த்தியின் கைவசம் 5 படங்கள் இருப்பதால் இயக்குநர் தமிழின் கனவு நனவாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow