பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை ஜனவரி 6-ம்தேதி கூடுகிறது?
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஜனவரி 6-ம்தேதி தமிழக சட்டசபை கூட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, பெருபான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக ஸ்டாலின் முதல் முறையாக பொறுப்பேற்று கொண்டார். திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு சட்டமன்ற தேர்தலை நடத்தி, புதிய அரசு அமர வேண்டும். அதற்கான சட்டமன்ற தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி பொங்கலுக்கு முன் தொடங்கவுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும். 1 வாரம் வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளது.இதன் பின்னர் பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட்டை மட்டும் திமுக அரசால் தாக்கல் செய்ய முடியும்.
தேர்தல் நெருங்க உள்ளதால், புதிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

