கடும் பனிமூட்டம் : விமான சேவை பாதிப்பு பயணிகள் கடும் அவதி
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பல மணி நேரம் விமான நிலையத்தில் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
நாடு முழுவதும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. தலைநகா் தில்லியிலும் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால், தில்லியில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை இயக்கப்பட்ட விமானங்களும், சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்ற விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த மோசமான வானிலையால், டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தாமதமாக வருகின்றன. அந்த விமானங்கள், சென்னை வந்துவிட்டு, சென்னையில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் செல்ல இருப்பதால், அந்த சேவையும் தாமதம் ஆகின்றன.
நேற்று அதிகாலை முதல் மதியம் வரை, டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் 4 விமானங்கள், சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்ந்தன.
இன்று காலையும் சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் அனைத்து தாமதம் ஆனது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.
சென்னையில் சாரல் மழை
சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பனிமூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் காலை 10 மணிமுதல் ஆலந்தூர், மீனம்பாக்கம், கிண்டி, மதுரவாயல் உள்பட சென்னை புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்த்தது.
ஏர் இந்தியா விமானம் தாமதம்
சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படும். துபாய், சிங்கப்பூர், மும்பை, டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் பல மணி நேரம் தாமதம். நிர்வாக காரணத்தால் தாமதம் என்று அறிவித்தாலும் விமானிகள், பொறியாளர் இல்லாததால் விமானங்கள் தாமதம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் விபத்து
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக நேரிட்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த 8 பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதியதில் ஒரு பேருந்தில் தீப்பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பேருந்துகளுக்கும் தீ பரவியதால் என்ன செய்வதென்று அறியாத வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துப் பயணிகள் தீயில் காயமடைந்தனர்.
தீ விபத்து நேரிட்டதும் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் 4 பேர் தீ விபத்தில் பலியாகியுள்ளனர். 150 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுரா மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுமார் 25 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பலரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.
What's Your Reaction?

