செயலக கட்டிடத்தை அடமானம் வைப்பதா?... ஜெகனை சாடிய சந்திரபாபு நாயுடு
ஜெகன் மோகன் ரெட்டி மீது தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் விமர்சனம்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மாநில செயலக கட்டிடத்தை அடமானம் வைத்ததாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஆட்சி அமராவதியில் உள்ள மாநிலச் செயலகத்தை அடமானம் வைத்து HDFC வங்கியில் இருந்து 370 கோடி ரூபாய் கடனாகப் பெற்றதாக செய்தி வெளியிட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இது அரசுக்கும், ஜெகனுக்கும் அவமானம் என்று சந்திர பாபு நாயுடு கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாநில மக்களின் சுயமரியாதையை ஜெகன் மோகன் ரெட்டி கெடுத்துள்ளதாக சாடியிருக்கிறார். மேலும்,
இதற்கிடையில், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். செயலகத்தை 370 கோடி ரூபாய்க்கு அடகு வைத்த செயல் சீரழிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், இது இலங்கையின் பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
What's Your Reaction?






