6 பேரிடம் NIA அதிகாரிகள் விசாரணை

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட "ஹிஸ்ப்-உத் தஹிரிர்" அமைப்பு விவகாரம்; இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு நபர்களை இரண்டாவது முறையாக 5 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்த NIA அதிகாரிகள்.

Oct 8, 2024 - 08:57
6 பேரிடம் NIA அதிகாரிகள் விசாரணை

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட "ஹிஸ்ப்-உத் தஹிரிர்" அமைப்பு விவகாரம்; இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு நபர்களை இரண்டாவது முறையாக 5 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்த NIA அதிகாரிகள்.

சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கடந்த மே மாதம் ராயப்பேட்டையில் தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பாக 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இது இரண்டாவது வழக்காக NIA வில் பதியப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி முதல் முறையாக 6 நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது அதே 6 நபர்களை இரண்டாவது முறையாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஐந்து நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்துள்ளனர்.

முதல் முறை கஸ்டடி எடுத்தபோது பல்வேறு தகவல்கள் பெறப்பட்ட நிலையில் 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதற்காகவும், சில தினங்களுக்கு முன் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தவும் இரண்டாவது முறையாக கஸ்டடி எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' முதல் வழக்கில் தஞ்சையைச் சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் (எ) முஜிபுர் ரஹ்மான் அல்தான் சாஹிப் மற்றும் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அஜீஸ் அகமது என மூவர் கைது செய்யப்பட்டனர். 

முதல் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த மூவரையும் கடந்த மாதம் 5 நாட்கள் போலொஸ் கஷ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow