திருவிழாவில் வழங்கப்பட்ட நீராகாரம், திண்பண்டங்களால் ஒவ்வாமை - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள்...

Apr 2, 2024 - 21:32
திருவிழாவில் வழங்கப்பட்ட நீராகாரம், திண்பண்டங்களால் ஒவ்வாமை - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள்...

திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவில் வழங்கப்பட்ட நீராகாரங்கள் மற்றும் திண்பண்டங்களை சாப்பிட்டதால் வாந்தி மயக்கத்துடன் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் நேற்று(ஏப்ரல்-1) முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் உள்ளிட்ட நீர் ஆகாரங்கள், வெள்ளரிக்காய் மாங்காய் கலந்த திண்பண்டங்கள் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை சாப்பிட்ட கிராமவாசிகள் பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பக்தர்கள் தாடிக்கொம்பு அரசு மருத்துவமனையில் வாந்தி மயக்கத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கிருந்து சுமார் 10 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று(ஏப்ரல்-1) அருந்திய நீராகாரங்கள் மூலம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், திருவிழா நடந்த பகுதியில் மாவட்ட சுகாதாரதுறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow