AI,டேட்டா சயின்ஸ் படிப்பை விரும்பும் மாணவர்களே உஷார்!.. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் வார்னிங்
AI,டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கு சரியான பேராசிரியர்கள் இல்லாத கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து படித்து முடிக்கின்ற போது அந்த நான்காண்டு காலமும் வீணாவதற்கான வாய்ப்பு உள்ளது.
நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் முன்பெல்லாம் ECE, EEE படிப்புகளுக்கும் CSC படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். இப்போது ஆர்டிபிசியல் இன்டலிஜென்ட், டேட்டா சயின்ஸ், மெஷின் லெர்ன்னிங் ஆகிய படிப்புகளை படிக்க விரும்புகின்றனர்.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் முதல் சாய்ஸ் AI படிப்பாக உள்ளது. இந்தப் படிப்புகளை தொடங்க 25 ஆயிரம் புதிய மாணவர் சேர்க்கை இடங்களை ஒதுக்க தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
சரியான பேராசிரியர்கள் இல்லாத கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து படித்து முடிக்கின்ற போது அந்த நான்காண்டு காலமும் வீணாவதற்கான வாய்ப்பு உள்ளது
டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட புதிய படிப்புகளில் சேரும் மாணவர்கள் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மட்டும் பார்த்து சேர்ந்தால் போதுமானது அல்ல அந்தக் கல்லூரிகளில் தரமான பேராசிரியர்கள் இத்தகைய பாடங்களை எடுக்க உள்ளார்களா என்பதை பெற்றோர்களும் மாணவர்களும் கருத்தில் கொள்ள வேண்டும்
வெறும் நான்காண்டு பொறியியல் பட்டப்படிப்புகள் மட்டும் இனி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தராது. மாணவர்கள் தேர்ந்தெடுத்த படிப்புகளில் எந்த அளவிற்கு திறன் உள்ளவர்களாக உள்ளனர் என்பதை இனி நிறுவனங்கள் கருத்தில் கொள்ளும்
பொறியியல் துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றது அதற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?