பிரத்யேகஆப் மூலம் சிக்கலில் மாட்டிய ஓரினத் தொடர்பாளர்கள்

ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரிக்கும்போதுதான் அனைவரும் ஹோமோ செக்ஸ் பிரியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Nov 27, 2023 - 12:01
Nov 27, 2023 - 12:19
பிரத்யேகஆப் மூலம் சிக்கலில் மாட்டிய ஓரினத் தொடர்பாளர்கள்

ஹோமோ செக்சுக்கு தனி ஆப் இருப்பது குறித்த தென்காசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி டி.எஸ்.பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிந்தாமணி செக்போஸ்டில் நின்று கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி மட்டும் ஊரை ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்தார்.அவர் செக்போஸ்ட் அருகே உள்ள வேன் ஸ்டாண்டுக்கு பின்புறம் தற்செயலாக சென்றிருக்கிறார்.

அப்போது அங்கு ஆறு பேர்கள் நின்று கொண்டு வாய்த்தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அவர்களைப் பிடிக்கப் போயிருக்கிறார் சப்- இன்ஸ்பெக்டர்.ஆனால், அந்த இளைஞர்கள் அரிவாளால் அவரை வெட்டப்பாய்ந்துள்ளனர். எஸ்.ஐ சுதாரித்துக்கொண்டு விலகியதால் அரிவாள் வெட்டிலிருந்து தப்பித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் வேகமாக ஓடத்தொடங்கியது.

உடனே எஸ்.ஐ சஞ்சய்காந்தி, மைக்கில் டி.எஸ்.பி வெங்கடேசனை தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.உடனே போலீசார் இரண்டு டீம்களாக பிரிந்து ஊருக்குள் தேடியிருக்கிறார்கள். அப்போது பேருந்து நிலையம் பக்கத்தில் பதுங்கி இருந்த ஆறு பேர்களையும் சுற்றி வளைத்துப்பிடித்தனர்.அனைவரையும் ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரிக்கும்போதுதான் அனைவரும் ஹோமோ செக்ஸ் பிரியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி கூறுகையில், “சிவகிரி கனகராஜ், உள்ளாறு செந்தமிழ்ச்செல்வன், சுனில்குமார், சதீஷ் ஆனந்த மற்றும் 17 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்களே அவர்கள். பட்டதாரிகளான இவர்கள் கிரீண்ட்ர் ஆப் மூலம் மாவட்டத்தில் உள்ள ஹோமோ செக்ஸ் பிரியர்களை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.பின்னர் அவர்களில் வசதியானவர்களை கண்டுபிடித்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து அவர்களின் வாட்ச், செயின், மோதிரம், பணம் ஆகியவற்றைப் பறித்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.அவர்கள் யாரையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow