உதயநிதி பிறந்த நாள்-ஆறாயிரம் மாணவர்களுக்கு கேக்!
பள்ளிகளில் காலை உணவுடன் கேக் வழங்கபட இருக்கிறது

நெல்லையில் உதயநிதி பிறந்த நாளையொட்டி ஆறாயிரம் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மாநில முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் ஒரு மாத காலத்திற்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நலத்திட்ட உதவிகள், பட்டிமன்றம், விளையாட்டுப் போட்டிகள், பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகளும் நடைபெறுகின்றன.
மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கேக் வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.பி.எம் மைதின்கான் நம்மிடம் கூறுகையில், “தி.மு.க இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா ஏழை, எளிய முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட காலை உணவுத்திட்டத்தின் கீழ் சாப்பிடும் நெல்லை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, பாளையங்கோட்டை சட்டமன்றத்தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலை உணவுடன் கேக் வழங்கபட இருக்கிறது என்று அறிவித்திருந்தேன்.
அதன்படி, நெல்லை மாநகராட்சியில் உள்ள நாற்பது பள்ளிகள், மானூர் ஒன்றியப் பகுதிகளில் 59 பள்ளிகள், பாளையங்கோட்டை ஒன்றியத்தில் 9 பள்ளிகள், ஆக மொத்தம் 108 https://graduados.unitepc.edu.bo/ பள்ளிகளில் படிக்கும் 6000 மாணவ, மாணவியருக்கு கேக் வழங்கப்பட்டது. காலையிலேயே தி.மு.க நிர்வாகிகள் அந்தந்தப் பள்ளிகளுக்குச் சென்று கேக் பாக்சுகளை வழங்கினார்கள்.அவற்றைப் பிரித்த ஆசிரியர்கள் அதை காலை உணவுடன் பரிமாறினார்கள்” என்றார்.
What's Your Reaction?






