கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா

காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி நடைபெறும் தெப்ப திருவிழா 27 ஆம் தேதியும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

Jan 16, 2024 - 18:05
Jan 16, 2024 - 19:48
கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா

நெல்லையப்பர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான எல்லை நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூச திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு விஸ்வரூப தரிசனம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 

பின்னர் கொடி பட்டம் பல்லக்கில் உட்பிரகாரத்தில் வீதி உலா எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளான திருநெல்வேலி பெயர்க்காரண திருவிளையாடல் திருவிழாவான நெல்லுக்கு சுவாமி வேலிட்ட திருவிழா வரும் 19ஆம் தேதி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் தாமிரபரணி நதிக்கரையில் எழுந்தருளி தைப்பூச மண்டபத்தில் நடைபெறும்.

தீர்த்தவாரி 25 ஆம் தேதியும், காந்திமதி அம்பாளுக்கு நடராஜ பெருமான் சௌந்தர சபையில் திரு நடன காட்சி பெருவிழா 26 ஆம் தேதியும் சந்திர புஷ்கரணியில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி நடைபெறும் தெப்ப திருவிழா 27 ஆம் தேதியும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow