பல்வேறு துறைகளில் நலத்திட்டங்கள்... காணொலி மூலம் தொடங்கி வைத்த முதலமைச்சர்..!

Feb 18, 2024 - 13:25
பல்வேறு துறைகளில் நலத்திட்டங்கள்... காணொலி மூலம் தொடங்கி வைத்த முதலமைச்சர்..!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.29.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய், நெஞ்சக மருத்துவ பிரிவுக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். 

மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ரூ.30 கோடி செலவில் மருத்துவ உபகரணங்களையும் அவர் பயன்பாட்டுக்கு வழங்கினார்.

இதேபோல் ஈரோடு, தூத்துக்குடி, கோபி, சத்தி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய வணிகவரி அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம் கீழுர் ஊராட்சியில் ரூ.139.65 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 204.57 கோடி செலவில் 1,374 புதிய வகுப்பறை கட்டடங்கள், ரூ.80.85 கோடி செலவில் துறைக் கட்டடங்கள், ரூ.48.56 கோடி செலவில் பள்ளிக் கட்டடங்கள், ரூ.3.92 கோடி செலவில் நூலக கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையும் படிக்க   |  7+1 க்கு தலையசைத்த அதிமுக - சுமூகமாக முடிந்த பாமக உடன்பாடு?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow