அரசு வேலை உங்கள் கனவா? இளைஞர்களை குஷிப்படுத்தும் அசத்தல் அறிவிப்பு..! இரண்டே வருஷத்தில் 50,000 பேருக்கு வேலை..!
ஜூன் மாதத்துக்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்
2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப்பணி வழங்குவதாக அறிவித்துள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஜுன் மாதத்துக்குள் 10,000 பணியிடங்கள் நிரப்படும் எனவும் கூறியுள்ளார்.
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கப்படுவதாகவும் ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,701 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ரூ.450 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் எனவும் ஜவுளித்தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் ரூ.500 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். நடப்பாண்டு பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.20,043 கோடியும் கரூர், ஈரோடு, விருதுநகரில் சிறிய ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ.20 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கைத்தறி, கைவினைப்பொருட்கள் விற்பனைக்காக சென்னையில் ரூ.227 கோடி மதிப்பில் சென்னையில் வணிக வளாகம் அமைக்கப்படுவதாகக் கூறிய அமைச்சர், தமிழ்நாட்டில் மொத்தம் 16 நகரங்களில் சாலைகளை மேம்படுத்த ரூ.2,877 கோடியும் காவல்துறையை நவீனப்படுத்த ரூ.124 கோடியும் ஒதுக்கப்படுவதாகக் கூறினார்.
நவீன தீயணைப்பு வாகனங்களைக் கொள்முதல் செய்ய ரூ.137 கோடி ஒதுக்கப்படுவதோடு, ரூ.20 கோடியில் கைவினைஞர் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் எனக்கூறிய அவர், 1000 மாணவர்களுக்கு UPSC பயிற்சி அளிக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜூன் மாதத்துக்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார். தஞ்சாவூர், சேலம், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நியோ டைடல் பூங்காக்கள் அமைத்து 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
What's Your Reaction?