Thalaivar 171: ஹாலிவுட் ரீமேக், பாலிவுட் வில்லன்..? ரூட் மாறாத லோகேஷ், சைலண்ட் மோடில் ரஜினி!

ரஜினியின் தலைவர் 171 ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில், இந்தப் படத்தின் ஒன்லைன், வில்லன் யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Apr 5, 2024 - 12:03
Thalaivar 171: ஹாலிவுட் ரீமேக், பாலிவுட் வில்லன்..? ரூட் மாறாத லோகேஷ், சைலண்ட் மோடில் ரஜினி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171, கோலிவுட் மட்டுமின்றி பான் இந்தியா அளவில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அனிருத் மியூசிக் கம்போஸராக கமிட்டாகியுள்ளார், அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் கோரியோகிராபி செய்கின்றனர். இது தவிர தலைவர் 171 படம் பற்றிய எந்தவொரு அபிஸியல் அப்டேட்டும் வெளியாகவில்லை. இது எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து வரும் 22ம் தேதி தெறிக்கவிட காத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதாவது தலைவர் 171 டைட்டில் டீசரில் மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.  

தலைவர் 171 டைட்டில் டீசர் ஷூட்டிங் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ரஜினிக்கு வில்லனாக யார் நடிக்க இருக்கிறார் என்பது பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி தலைவர் 171ல் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் கமிட்டாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ரன்வீர் சிங்கிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. தற்போது ரஜினி – லோகேஷ் கூட்டணியில் ரன்வீர் சிங்கும் இணைந்துள்ளதாக தெரிகிறது.  

இதனிடையே தலைவர் 171 ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. கமலின் விருமாண்டி இன்ஸ்பிரேஷனில் கைதி படத்தை இயக்கினார் லோகேஷ். அதேபோல், ஹாலிவுட் படமான History of Violence-ஐ தழுவி லியோ படத்தை இயக்கியிருந்தார். இதுபற்றி முதலில் தகவல்கள் வெளியான போதும் அதனை லோகேஷ் மறுத்தார். ஆனால், லியோ டைட்டில் கார்டில் History of Violence படத்தை மென்ஷன் செய்திருந்தார். அதே வரிசையில் தற்போது தலைவர் 171 படத்தையும் இயக்கவுள்ளாராம்.     

ஹாலிவுட்டில் 2013ம் ஆண்டு வெளியான ‘The Purge’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அந்தப் படத்தை தழுவி தான் தலைவர் 171 உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒருமுறை 12 மணி நேரம் சில விதிமுறைகள் தளர்த்தப்படுகிறது. அப்போது யார் யாரை வேண்டுமானாலும் கொலை செய்து கொள்ளலாம், அதுபற்றி போலீஸ் விசாரணை கிடையாது, மருத்துவமனையிலும் உயிருக்குப் போராடுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாது. அப்போது ஹீரோவின் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் தான் The Purge படத்தின் கதை.  

இதனை தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளாராம் லோகேஷ். இதுபற்றி அபிஸியல் அப்டேட்ஸ் வெளியாகவில்லை என்றாலும் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் டாபிக் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர் 171 படத்திற்கு ‘கழுகு என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாகவும் இன்னொரு தகவல் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow