Akira Toriyama: கார்ட்டூன் உலகின் முன்னோடி… 90ஸ் கிட்ஸ் பிரபல இயக்குநர் காலமானார்

பிரபல டிராகன் பால் கார்ட்டூன் தொடர் மூலம் புகழ் பெற்ற அகிரா டொரியமா உடல் நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mar 8, 2024 - 13:18
Akira Toriyama: கார்ட்டூன் உலகின் முன்னோடி… 90ஸ் கிட்ஸ் பிரபல இயக்குநர் காலமானார்

’டிராகன் பால்’ என்ற கார்ட்டூன் தொடரை உருவாக்கிய அகிரா டொரியமா காலமானார். அவருக்கு வயது 68. டோய் அனிமேஷன் மூலம் கார்ட்டூன் தொடரை உருவாக்கிய அகிரா டொரியமாவுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 1984 முதல் 1995ம் ஆண்டு வரை தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான டிராகன் பால், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கார்ட்டூன் தொடராக கொண்டாடப்பட்டது. 

ஜப்பானை சேர்ந்த அகிரா டொரியமா, தனது 20வது வயதிலேயே பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, தீவு ஒன்றில் தனியாக சிக்கிய விமானியின் சாகச பயணங்களை, ஒண்டர் ஐலேண்ட் (Wonder Island) என்ற பெயரில் வெளியிட்டு கவனம் ஈர்த்திருந்தார். அதன் பின்னர் பிரபல கார்ட்டூன் இயக்குநராக வலம் வந்த அகிரா உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

இதுபற்றி டிராகன் பால் அபிஸியல் வெப்சைட்டில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் மார்ச் 1ம் தேதியே அகிரா இறந்துவிட்டதாகவும், மூளைக்கு அருகில் ஏற்பட்ட ரத்த கசிவு பாதிப்பு தான் இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், அகிராவின் இறுதிச் சடங்கு அவரது குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது எனவும் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow