Chiyaan Vikram: மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநருடன் இணையும் சீயான் விக்ரம்… ஷூட்டிங் எப்போன்னு தெரியுமா?
மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது. இதன் மூலம் பிரபலமான இயக்குநர் சிதம்பரம் அடுத்து சீயான் விக்ரம் உடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
                                சென்னை: பொன்னியின் செல்வனுக்குப் பின்னர் தங்கலான் படத்தில் கவனம் செலுத்தினார் விக்ரம். இத்திரைப்படம் மூலம் முதன்முறையாக இயக்குநர் பா ரஞ்சித்துடன் இணைந்துள்ளார். இதனால் தங்கலான் படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக காணப்படுகிறது. ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் எலெக்ஷன் காரணமாக தள்ளிப் போனதாக சொல்லப்படுகிறது. இதனிடையே சீயான் 62 ஷூட்டிங் போக ரெடியாகிவிட்டார் விக்ரம்.
சு அருண்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள சீயான் 62 படத்தில், எஸ்ஜே சூர்யா, சுராஜ் ஆகியோர் ஏற்கனவே கமிட்டாகிவிட்டனர். இந்த வரிசையில் துஷாரா விஜயனும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக நேற்று படக்குழு அறிவித்திருந்தது. மேலும் சீயான் 62 ஷூட்டிங் இம்மாதம் 22ம் தேதி தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் விக்ரமை சந்தித்து கதை கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ரிலீஸான மஞ்சும்மல் பாய்ஸ் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்தில், குணா குகை, கண்மணி அன்போடு பாடல் என இந்த இரண்டும் லீடாக அமைந்தன. இதற்காகவே மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள்.
 
அதுமட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சிம்பு, தனுஷ், விக்ரம் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர். இதனையடுத்து இயக்குநர் சிதம்பரத்தின் அடுத்த பட ஹீரோ தனுஷ் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது விக்ரம் – சிதம்பரம் கூட்டணி உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சீயான் 63 படத்தை ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்கவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சீயான் 62 முடிவுக்கு வந்ததும் சீயான் 63 ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            