அண்ணாமலையை கட்டிப் பிடித்த இளைஞரை பா.ஜ.க. நிர்வாகி தாக்க முயற்சி
இறுக கட்டிப்பிடித்த இளைஞரை அண்ணாமலை தனது அருகே அழைத்து நலம் விசாரித்தார்.
தஞ்சாவூரில் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் அண்ணாமலையை இளைஞர் ஓருவர் இறுக கட்டி பிடித்ததால் அவரை தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் என் எண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதன்மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் தஞ்சாவூரில் மாவட்டத்தில் தற்போது நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தஞ்சை கொடிமரத்து மூலையில் இருந்து அண்ணாமலை என் மண், என் மக்கள் நடை பயணத்தை தொடங்கினார்.வடக்கு வீதி சாலை வழியாக அண்ணாமலை தொண்டர்கள் புடைசூழ நடந்து சென்றார்.அப்போது கூட்டத்தில் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென அண்ணாமலை கையை பற்றியவாறு இறுக அணைத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அண்ணாமலை அந்த இளைஞரை பிடித்து தள்ளினார்.அப்போது உடன் இருந்த மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் அந்த இளைஞரை தாக்க முற்பட்டார்.
மேலும் அண்ணாமலையின் பாதுகாப்பிற்கு இருந்த அதிகாரி ஒருவர் இளைஞரை தாக்கினார்.இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இறுக கட்டிப்பிடித்த இளைஞரை அண்ணாமலை தனது அருகே அழைத்து நலம் விசாரித்தார்.மேலும் பாஜக சால்வை அணிவித்து தட்டிக்கொடுத்தார்.
மேலும் அந்த இளைஞர் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.இதனால் மீண்டும் கூட்டத்தில் உற்சாக கோஷம் எழுப்பினர்.பின்னர் அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடர்ந்தார். அண்ணாமலையின் நடைபயணத்தில் இளைஞரின் செயல் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?