தீப்பெட்டி ஒதுக்கிய தேர்தல் ஆணையம்.. தீப்பிடிக்குமா மதிமுக... 

மக்களவைத் தேர்தலில்  போட்டியிடும் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. 

Mar 30, 2024 - 18:52
Mar 30, 2024 - 21:39
தீப்பெட்டி ஒதுக்கிய தேர்தல் ஆணையம்.. தீப்பிடிக்குமா மதிமுக... 

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக வரும் மக்களவைத் தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இதையடுத்து திருச்சியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய மதிமுகவின் வேட்பாளரான துரைவைகோ, தங்களது சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று உறுதிபட கூறியிருந்தார். இந்த நிலையில் மதிமுகவின் சின்னமான பம்பரம் அவர்களுக்கு ஒதுக்கப்படாததால் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். 

இதன் காரணம் என்ன என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்த நிலையில் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது. ஒரு கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இருந்த சின்னத்தை ஒரு தொகுதிக்காக பொது சின்னமாக அறிவிப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து மாற்று சின்னத்தை கோருமாறு மதிமுகவிடம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்த நிலையில் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இதனை தேர்தல் அலுவலரும், திருச்சி மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow