நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம்.
டேனியல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் சென்னை, ஓட்டேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் டேனியல் பாலாஜி. அவருக்கு வயது 48. இந்த நிலையில் நேற்று (மார்ச் 29) அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி டேனியல் பாலாஜியின் உயிர் பிரிந்தது.
இதையடுத்து புரசைவாக்கத்தில் உள்ள இல்லத்தில் இன்று (மார்ச் 30) இறுதி அஞ்சலிக்காக டேனியல் பாலாஜியின் உடல் வைக்கப்பட்டது. திரையுலகினர், ரசிகர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து டேனியல் பாலாஜியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஓட்டேரியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வேட்டையாடு விளையாடு, பிகில், வை ராஜா வை, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான டேனியல் பாலாஜியின் மறைவு, அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா வடுவாக மாறியுள்ளது.
What's Your Reaction?