தேர்தல் பத்திர விவரங்கள்...  புதிய தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்..!

Mar 21, 2024 - 21:21
தேர்தல் பத்திர விவரங்கள்...  புதிய தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்..!

எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. 

தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த பத்திரங்களை எஸ்பிஐ வங்கியிலிருந்து வாங்கிய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் விரும்பிய கட்சிகளிடம் சமா்ப்பித்தன. அந்தப் பத்திரங்களை வங்கி வழியாக அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிக்கொண்டன. அந்தப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாக நிதி பறிமாறப்பட்டது. 

இந்த திட்டம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி கடந்த மாதம் 15-ந் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு எஸ்.பி.ஐ வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், தேர்தல் பத்திர எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ  உச்ச நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 21) பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow