2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் - எங்கெல்லாம் செல்கிறார்..? முழு பயண விவரம் இதோ..
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக வருகிற 27-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
அதன்படி, வரும் 27 ஆம் தேதி மதியம் 1:20 மணிக்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர், பிற்பகல் 2:05 மணி அளவில் கோவை சூலூர் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2:30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார்.
பிற்பகல்2:45 முதல் 3:45 வரை "என் மண், என் மக்கள்" நடைபயண நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நிகழ்ச்சியை முடித்து விட்டு, பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணி அளவில் மதுரை சென்றடைகிறார்.
மதுரையில் மாலை 5:15 முதல் 6:15 மணி வரை தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். இதனையடுத்து மாலை 6:45 அளவில் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு செல்லும் பிரதமர், அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.
பிப்ரவரி 28-ஆம் தேதி காலை 8:15 மணி அளவில் நட்சத்திர விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் செல்கிறார். 8:40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9:30 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடி சென்றடைகிறார்.
காலை 9:35 மணிக்கு சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் மோடி, காலை 9:45 முதல் 10:30 மணி வரை அரசின் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 11:10 மணிக்கு பிரதமர் மோடி திருநெல்வேலி செல்கிறார். அங்கு, காலை 11:15 மணி முதல் நண்பகல் 12:15 மணி வரை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பின்னர் நண்பகல் 12:30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, மதியம் 1:10 மணிக்கு கேரளா செல்கிறார்.
மேலும் படிக்க :
What's Your Reaction?