ஜனவரி 20-ல் சட்டசபை: தமிழக அரசின் தயாரித்து கொடுக்கும் உரையை ஆர்.என்.ரவி வாசிப்பாரா, ஆளுநர் மாளிகை திட்டம் என்ன ?
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி கூடுவுள்ளதாகவும், தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை ஆளுநர் வாசிப்பாரா என பலரின் ஐயமாக உள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், வழக்கமான முழு நிதிநிலை அறிக்கைக்குப் பதிலாக, அதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் (Interim Budget) மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக சட்டசபையில் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, புதிய நிதிநிலை அறிக்கையை (முழுமையான பட்ஜெட்) ஜூன் மாதம் முழுமையாக தாக்கல் செய்யும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
2026ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜன.20 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும் தமிழ்நாடு அரசு தயாரித்து தரும் உரையை ஆளுநர் சட்டப்பேரவையில் வாசிப்பார் என்றும் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், 110 விதியின் கீழ் பல அறிவிப்புக்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 வருடங்களாக ஆளுநர் உரையின் போது தமிழக சட்டசபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஆளுநர் உரையாவது அமைதியாக நடைபெறுமா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழக அரசு தயாரித்து தரும் உரையை ஆளுநர் வாசிப்பார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆனால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், கடைசி ஆளுநர் உரை என்பது ஆகும். ஏற்கனவே திமுக அரசும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் பல விஷயங்களில் உரசி கொண்டு வருகின்றனர். அதனால் தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை ஆளுநர் படிப்பாரா என்பது சந்தேகம் என்கிறது ஆளுநர் மாளிகை வட்டாரங்கள்.
சட்ட ஒழுங்கு பிரச்னை, பெண்கள் பாதுகாப்பு, மத்திய அரசுக்கு எதிரான உள்ளிட்ட திமுகவின் செயல்பாடுகளை பட்டியிலிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
What's Your Reaction?

