முரசு சின்னத்தில் ஒரு குத்து.. எல்லார் வாழ்க்கையும் கெத்து.. விஜய பிரபாகர் கலகல பேச்சு
ஏப்ரல் 19ஆம் தேதி முரசு சின்னத்துல ஒரு குத்து, அடுத்த 5 வருஷசத்து எல்லோரோட வாழ்க்கையும் கெத்துனு சொல்லி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தது தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் தேமுதிக களமிறங்கி உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருப்பரங்குன்றம் சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் இணைந்து திருப்பரங்குன்றத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
முன்னதாக திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோவிலுக்கு சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் பேசினார். அப்போது பேசிய அவர், கேப்டன் இல்லாமல் பிரசாரம் செய்வது உண்மையிலேயே மனதிற்கு கஷ்டமா இருக்கு. இந்த கூட்டணி கண்டிப்பாக ஜெயிக்கணும். 2026தான் நம்முடைய இலக்கு, அதற்கான தொடக்கம் தான் 2024 மக்களவைத் தேர்தல் என்று கூறினார்.
கேப்டன் மறைந்து சரியாக 100 நாள் ஆச்சு.! இருந்தும் கேப்டன் ஆசை எல்லாமே தேமுதிகவில் இருந்து எப்படியாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கணும் என்பதுதான். அதை கடைசி வரை கேப்டன் பார்க்காமல் போயிட்டாரு இருந்தாலும்., அவர் மகனாக நான் உங்க முன்னாடி நிற்கும் போது நிச்சயம் அவரோட ஆசை நிறைவேறும்.
உங்க வீட்டுப் பிள்ளையாக உங்கள் முன்னாடி வாக்குகளை கேட்டு வந்திருக்கேன். துளசி கூட வாசம் மாறும் ஆனால் தவசி புள்ள வார்த்தை மாறமாட்டான். சொன்னதை நிச்சயம் மக்களுக்காக கடைசி வரைக்கும் உழைக்க தயாரா இருக்கிறோம்.! வரும் ஏப்ரல் 19-ம் தேதி முரசு சின்னத்தில் ஒரு குத்து, அடுத்த 5 வருஷத்துக்கு எல்லோர் வாழ்க்கையும் கெத்து என்று விஜய பிரபாகர் கலகலப்பாக பேசியது அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
What's Your Reaction?