6 மாநில உள்துறை செயலாளர்கள், மேற்குவங்க டிஜிபி-யை மாற்ற உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்...
6 மாநில உள்துறை செயலாளர்கள், இரண்டு மாநில தலைமைச் செயலாளர்கள், மேற்கு வங்க டிஜிபி ஆகியோர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலை ஒட்டி 6 மாநில உள்துறை செயலாளர்கள், இரண்டு மாநில பொதுச்செயலாளர்களை மாற்ற இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், பல்வேறு உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இன்று(மார்ச்-18) குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தரக்காண்ட் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை மாற்றுவதற்கான உத்தரவை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மேலும், மிசோரம், ஹிமாச்சல்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைமை செயலாளர்களையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் காவல்துறை தலைவரையும் (டி.ஜி.பி.) மாற்ற உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையம் டி.ஜி.பி.-யை மாற்ற உத்தரவிட்ட இன்று ஒரே நாளில் மேற்கு வங்கத்தின் புதிய டி.ஜி.பி.-யாக விவேக் சஹாய் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?