நெருங்கும் தேர்தல்; தென் மாநிலங்களில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுகிறது - பிரதமர்
தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானாவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது - பிரதமர் நரேந்திர மோடி
முதற்கட்ட மக்களவை தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், தென் மாநிலங்களில் பாஜக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்து வருகிறார். தமது இந்த பயணத்தின் முக்கியத்துவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில். தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானாவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தாண்டில் 6-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 18) தமிழ்நாடு வருகிறார். கர்நாடகாவில் இருந்து இந்திய விமானப்படையின் தனிவிமானம் மூலம் பிரதமர் மாலை 5.30 மணிக்கு கோவை விமானநிலையத்தை பிரதமர் வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர், மாலை 5.45 முதல் 6.45 வரை பாஜக பேரணிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இரவு கோவையில் தங்கிவிட்டு நாளை காலை கேரளாவுக்குச் செல்லும் அவர், மீண்டும் தமிழ்நாட்டின் சேலத்துக்கு பகல் 12.50 மணிக்கு வந்தடைகிறார். நாளை பிற்பகல் நடைபெறும் பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று, 2.25 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படுகிறார்.
What's Your Reaction?