The GOAT: தி கோட் படத்தில் AI மூலம் இணையும் அடுத்த பிரபலம்... விஜய் பிறந்தநாளில் சம்பவம் இருக்கு!

விஜய்யின் தி கோட் படத்தில் மேலும் ஒரு பிரபலத்தை AI மூலம் பயன்படுத்தியுள்ளாராம் இயக்குநர் வெங்கட் பிரபு.

Jun 15, 2024 - 12:32
The GOAT: தி கோட் படத்தில் AI மூலம் இணையும் அடுத்த பிரபலம்... விஜய் பிறந்தநாளில் சம்பவம் இருக்கு!

சென்னை: லியோவை தொடர்ந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். முதன்முறையாக தளபதி விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இவர்களுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், மாஸ்டர் பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, லைலா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. அதேபோல், கேப்டன் விஜயகாந்த், சிவகார்த்திகேயன் இருவரையும் கேமியோவாக நடிக்க வைத்துள்ளாராம் வெங்கட் பிரபு. முக்கியமாக கேப்டன் விஜயகாந்தை ஏஐ மூலம் ரீ-கிரியேட் செய்துள்ளனர். 

கேப்டன் விஜயகாந்தின் போர்ஷன் ஒரு நிமிடம் வரை இடம்பெறும் என சொல்லப்படுகிறது. அதேபோல், சிவகார்த்திகேயன் காட்சிகள் க்ளைமேக்ஸுக்கு முன்பு 5 நிமிடங்கள் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் பிறந்தநாள் இந்த மாதம் 22ம் தேதி என்பதால், அதனை முன்னிட்டு தி கோட் படத்தின் அப்டேட்ஸ் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கோட் செகண்ட் சிங்கிள் அல்லது விஜய்யின் கிளிம்ப்ஸ் வீடியோ என இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை படக்குழு ரிலீஸ் செய்யும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் விஜயகாந்தை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலத்தை ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தியுள்ளாராம் வெங்கட் பிரபு.

அதன்படி, தி கோட் படத்தின் ஒரு பாடலில், மறைந்த பவதாரிணியின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். இளையராஜாவின் மகளும் யுவனின் அக்காவுமாகிய பவதாரிணி, பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கேன்சர் பாதிப்பு காரணமாக இலங்கையில் உயிரிழந்தார் பவதாரிணி. இதனால் இளையராஜா, யுவன், வெங்கட் பிரபு உட்பட பவதாரிணியின் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. அதேபோல், பவதாரிணியின் இறுதிச் சடங்கின் போது இளையராஜா குடும்பத்தினர் அவரது பாடலை பாடி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தற்போது கோட் படத்தில் பவதாரிணி குரல் பயன்படுத்தப்பட்டுள்ள பாடல், விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இது மெலடியாக உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏஐ டெக்னாலஜி மூலம் லால் சலாம் படத்தின் ஒரு பாடலில் மறைந்த சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தியிருந்தார் ஏஆர் ரஹ்மான். அவரைத் தொடர்ந்து யுவன் தனது அக்கா பவதாரிணியின் குரலை பயன்படுத்தியிருப்பது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow