Vijay: “விஜய்ண்ணா கூட Connection கிடையாது... அவர் சொன்ன அந்த வார்த்தை..” விஜய பிரபாகரன் ஓபன்!
மறைந்த கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தளபதி விஜய் குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
                                சென்னை: தளபதி விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. தி கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்தை AI டெக்னாலஜி மூலம் நடிக்க வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக பிரேமலதா விஜயகாந்திடம் வெங்கட் பிரபு அனுமதி வாங்கியுள்ளார். முன்னதாக விஜயகாந்தின் உயிரிழந்த போது அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார் விஜய். அதேபோல், எஸ்.ஏ சந்திரசேகர் - விஜயகாந்த் கூட்டணியில் வெளியான பல படங்களில், கேப்டனின் சின்ன வயது கேரக்டரில் விஜய் நடித்திருந்தார்.
இந்நிலையில், விஜய் பற்றி கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசியது வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். கண்டிப்பாக வெற்றிப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வி கண்டார். ஆனாலும், வாக்கு எண்ணிக்கையின் போது பல சுற்றுகளில் விஜய பிரபாகரன் தான் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அடுத்தத் தேர்தலுக்கு தயாராகி வரும் விஜய பிரபாகரன், விஜய் அண்ணாவுக்கும் எங்களுக்கும் பெரிய கனெக்ஷன் கிடையாது என கூறியுள்ளார். எஸ்.ஏ சந்திரசேகர் சார் அப்பாவை வைத்து பல படங்கள் இயக்கியுள்ளார், அதில் விஜய் அண்ணாவும் நடித்துள்ளார். அதனால் அவர்களுக்குள் நெருங்கிய நட்பு இருந்தது. இதனால் தான் செந்தூரபாண்டி படத்தில் விஜய்ண்ணாவுடன் அப்பாவும் இணைந்து நடித்திருந்தார். ஆனால், அப்பாவை தவிர்த்து எங்களுக்கும் விஜய்ண்ணாவுக்கும் பெரிதாக தொடர்பு கிடையாது. அப்பா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது தான் விஜய் அண்ணாவை முதன்முதலாக பார்த்தேன். அப்போது என் மீது வைத்துக்கு Take care brother என விஜய்ண்ணா கூறியதாக பேசியுள்ளார் விஜய பிரபாகரன்.
அதேபோல், தி கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜியில் நடிக்கவிருப்பது குறித்து இன்னும் சரியாக தெரியவில்லை. அப்பாவின் கேரக்டர் 1 நிமிடம் வரை வர வாய்ப்பிருப்பதாகவும், விரைவில் அதுபற்றி தகவல்கள் வெளியாகலாம் எனவும் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்தின் ஆரம்பகாலத்தில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் தான் அவரை வைத்து தொடர்ச்சியாக படங்கள் இயக்கி ஹிட் கொடுத்தார். அதன்பின்னர் தான் விஜயகாந்தின் மார்க்கெட் உச்சம் தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            