45 தொகுதி வேணும் : 23-க்கு மேல தர முடியாது : பியூஸ் கோயலிடம் எடப்பாடி கறார் 

45 தொகுதிகள் வேண்டும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலின் கோரிக்கை எடப்பாடி நிரகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 23 தொகுதிகளுக்கு மேல் பாஜகவிற்கு தர முடியாது என எடப்பாடி கறாராக கூறியதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தினகரன், பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்த்து கொள்ள எடப்பாடி சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் எம்ஜிஆர் மாளிகை வட்டார்ங்கள் தெரிவிக்கின்றன.

45 தொகுதி வேணும் : 23-க்கு மேல தர முடியாது : பியூஸ் கோயலிடம் எடப்பாடி கறார் 
Edappadi Karar to Piyush Goyal

பியூஸ் கோயல் சென்னை வருகை 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். அவருடன் இணை பொறுப்பாளர்களாக மத்திய இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மொஹோல் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் பியூஷ் கோயலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.

கமலாலயத்தில் ஆலோசனை 

இதனையடுத்து, பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற மையக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், மாநில மற்றும் மத்திய பாஜக தலைவர்கள் கலந்து கொண்டு, தேர்தல் தொடர்பான வியூகங்கள், கூட்டணி விரிவாக்கம், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், விஜயதாரணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மைலாப்பூர், தி.நகர், கோவை, திருப்பூர், ஊட்டி, நாகர்கோவில் உள்ளிட்ட 45 தொகுதிகளை உள்ளடக்கிய 60 தொகுதி உத்தேச பட்டியலை எடப்பாடியுடன் சந்திப்பின் போது அளிக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எடப்பாடியுடன் சந்திப்பு 

கமலாலய கூட்டத்திற்கு பின்னர், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பியூஷ் கோயல் ஆகியோர் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்டோரும், அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி,வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனற். 

அப்போது 60 தொகுதிகளிடம் தங்களிடம் தந்தால். அதில் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன் ஆகியோருக்கு தங்கள் சீட் ஒதுக்கி கொடுப்பதாகவும், அமமுக, பன்னீர்செல்வத்திற்கு 15 சீட்களை 60 சீட்டில் கொடுத்துவிடுவதாகவும் பியூஸ் கோயல் கூறியதாக தெரிகிறது. 

அதற்கு எடப்பாடி தரப்பில், தினகரன் 6 சீட், பன்னீர்செல்வத்திற்கு 3 சீட் தனியாக தருகிறோம்.  பாஜகவிற்கு. 23 தொகுதிகளை தருகிறோம், பாமகவிற்கு 23, தேமுதிகவிற்கு 6 தர முடிவு செய்துள்ளோம்.   கூறப்பட்டது. 2 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாஜக கூடுதல் தொகுதி கேட்டு வலியுறுத்திய போதும், 23 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என எடப்பாடி தரப்பில் கறாராக கூறிவிட்டதாக தெரிகிறது. 

சுமூகமாக நடந்த பேச்சுவார்த்தை 

பேச்சுவார்த்தைக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். தேர்தல் தொகுதி பங்கீடு முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow