நடிகர் தனுஷை தங்கள் மகன் என உரிமை கோரி தம்பதி தொடர்ந்த வழக்கு... அபத்தமானது என தள்ளுபடி செய்த நீதிமன்றம்...

Mar 13, 2024 - 13:53
நடிகர் தனுஷை தங்கள் மகன் என உரிமை கோரி தம்பதி தொடர்ந்த வழக்கு... அபத்தமானது என தள்ளுபடி செய்த நீதிமன்றம்...

நடிகர் தனுஷை தங்களது மகன் என உரிமை கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த  கதிரேசன் - மீனாட்சி தம்பதி, கடந்த 2015-ல் மேலூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில், நடிகர் தனுஷ் தங்களது மகன்தான் என்றும், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும், பெற்றோர் பராமரிப்புக்கான நடிகர் தனுஷ் தங்களுக்கு மாத உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தனர் 

இந்த வழக்கில் தனுஷ் தரப்பினர் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்ததாகக் கூறி கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை மதுரை ஜேஎம் 6ம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு செய்திருந்தார். அதில், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையின் முடிவு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை கவனிக்காமல், தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்து, முறையாக விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், தவறான உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்பதால், தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow