மராட்டா சமூகத்தினர் கொண்டாடும் பொங்கல் விழா-சர்க்கரை மிட்டாய் தயாரிக்கும் பணி தீவிரம்

பானை, அம்மன், சிவன், கரும்பு, வாழைப்பழம்  கிருஷ்ணர், விநாயகர், ஆண், பெண் உருவங்கள் சர்க்கரை மிட்டாய் தயாரிக்கின்றனர்.

Jan 13, 2024 - 23:44
மராட்டா சமூகத்தினர் கொண்டாடும் பொங்கல் விழா-சர்க்கரை மிட்டாய் தயாரிக்கும் பணி தீவிரம்

மராட்டா சமூகத்தினர் பொங்கல் விழாவிற்கு சர்க்கரை மிட்டாய் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சையை சோழர், நாயக்கர் மன்னர்கள் அடுத்து மராட்டியர்கள் ஆட்சி புரிந்தனர்.மராட்டா சமூகத்தினர் தஞ்சை அரண்மனை சுற்றி நான்கு ராஜ வீதிகளில் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.இவர்களது சமூகத்தில் சர்க்கரை மிட்டாய் பெரும் பங்கு வகிக்கிறது.குறிப்பாக பொங்கல் பண்டிகையின்போது சர்க்கரை மிட்டாய் முக்கியமாக பயன்படுத்துவது வழக்கம்.

இந்த சர்க்கரை மிட்டாயை பொங்கலுக்கு முந்தைய ஐந்தாம் நாள், மூன்றாம் நாள் வாங்கி விடுவார்கள்.இந்த சர்க்கரை மிட்டாயை மராட்டா சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 7 தலைமுறைகளாக தயாரித்து வருகிறார்கள்.சர்க்கரையை நன்றாக பாகுபோல் காய்ச்சி பல்வேறு உருவங்கள்.வடிவங்களில் உள்ள அச்சுகளில் காய்ச்சிய சர்க்கரை பாகை ஊற்றி ஆறிய பிறகு மிட்டாயாக எடுக்கின்றனர்.பானை, அம்மன், சிவன், கரும்பு, வாழைப்பழம்  கிருஷ்ணர், விநாயகர், ஆண், பெண் உருவங்கள் சர்க்கரை மிட்டாய் தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து சர்க்கரை மிட்டாய் தயாரித்து வரும் நளினி பாய் கூறும்போது,  “சரபோஜி மன்னர் காலத்தில் இருந்து சர்க்கரை மிட்டாய் பாரம்பரியமாக 7 தலைமுறையாக தயாரித்து வருகிறோம்.பொங்கலுக்கு அவசியம் சர்க்கரை மிட்டாய் வாங்குவார்கள்.ஐந்து பானை,ஐந்து சட்டி,ஐந்து சாமி,வாழைப்பழம்,வெற்றிலை பாக்கு வைத்து பொங்கலுக்கு ஐந்து நாட்கள் மூன்று நாட்கள் முன்னதாக சர்க்கரை மிட்டாய் வாங்கி விடுவோம்.

பொங்கல் பொங்கி வரும்பொழுது இந்த ஜீனி மிட்டாயை பானையில் போட்டு பொங்கலோ பொங்கல் என குழவை இடுவோம்.மராட்டா சமூகத்தில் சுமங்கலி பூஜையில் இந்த சர்க்கரை மிட்டாய் வைத்து கொடுப்பது வழக்கம்.திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சீனி மிட்டாய் வைத்து வழிபட்டால் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.மராட்டா வம்சாவளியில் சேர்ந்த நாங்கள்.இந்த சீனி மிட்டாய் செய்து வருகிறோம்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow