அமலாக்கத்துறை வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லும் செந்தில்பாலாஜி...

அமலாக்கத்துறை வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Mar 6, 2024 - 13:58
அமலாக்கத்துறை வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லும் செந்தில்பாலாஜி...

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 7 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் அவர், பலமுறை ஜாமின் கேட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தும், அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. 

மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கவும் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கௌதம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்ற நீதிபதி அல்லி, வழக்கை மார்ச் 11-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நிலையில், அதுவரை செந்தில் பாலாஜியின் காவலும் நீட்டிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow