வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் - தஞ்சையில் இருந்து அனுப்பி வைப்பு
பிரட், அரிசி மூட்டைகள், மளிகைப் பொருட்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு அரிசி, மளிகைப்பொருட்கள், நாப்கின்' பால் பவுடர் உள்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மேயர் மற்றும் ஆணையர் இரண்டு வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.
கனமழை வெள்ளம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தஞ்சை மாநகராட்சி சார்பில் 300 கிலோ பால் பவுடர், பிஸ் பாக்கெட் 45 பெட்டிகள், தண்ணீர் பாட்டில்கள் 27 பெட்டிகள், பிரட், அரிசி மூட்டைகள், மளிகைப் பொருட்கள், போர்வைகள், சமையல் எண்ணெய். மெழுகுவர்த்திகள், நாப்கின் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நிவாரணமாக இரண்டு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மேயர் சண்.இராமநாதன், ஆணையர் மகேஸ்வரி, துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம் பூபதி ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?