முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது !

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

Jan 23, 2024 - 09:49
Jan 23, 2024 - 09:55

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

சென்னை வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதியில்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூபாய்  6 லட்சத்து 64 ஆயிரம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் குழு ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வரும் 28-ம் தேதி அன்று ஸ்பெயினுக்கு செல்லவுள்ளார்.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் காலை 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல்கூட்டத்தொடரில் கவர்னரை அழைப்பதும் அவர் உரை நிகழ்த்துவதும் மரபாக உள்ளது. மேலும் முதலமைச்சர் வெளிநாடு பயணம் குறித்தும் புதிய தொழில் தொடங்குவது அனுமதி குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இது குறித்தும் சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என அடுத்ததடுத்த  நிகழ்வுகள் உள்ளன.மேலும் இவை அனைத்தும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே நடைபெற உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow