"மேகதாது அணை : அனைத்து ஏற்பாடுகளும் தயார்!" - சித்தராமையா
கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக, மாநில பட்ஜெட் தாக்கலின் போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் கர்நாடகாவுக்கு ரூ.59,274 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சஞ்சீவினி கஃபே என்ற பெயரில் பெண்களே நடத்தும் கஃபேக்கள் சுமார் 0ரூ.7 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார். மொத்தமாக 5 மக்கள் நலத்திட்டங்களுக்கு, ரூ. 57,000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட சித்தராமையா, அணையை கட்ட ஒரு தனி மண்டலக் குழு, 2 துணை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக கூறினார். கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை வராமல், சித்தராமையாவின் நடவடிக்கைகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?