காங்கிரஸ் கட்சியில் போட்டியிட ஆட்களே இல்லை... கமல்ஹாசன் சாயம் வெளுத்துவிட்டது – விந்தியா காட்டம்...

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட ஆட்களே இல்லை என்பது தெரியாமல் திமுக 9 சீட்டுகளை வாரி வழங்கியிருப்பதாக அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் போட்டியிட ஆட்களே இல்லை... கமல்ஹாசன் சாயம் வெளுத்துவிட்டது – விந்தியா காட்டம்...

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேவியர் தாசை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சிவகங்கை தொகுதியின் எம்பியாக இருந்த சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் இதுவரை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என கூறினார்.

 

காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாட்டில் போட்டியிடுவதற்கே ஆளில்லை. திமுகவிடம் 6 என காங்கிரஸ் எழுதி கொடுத்ததை திமுக தலைமை 9 என நினைத்துக் கொண்டு சீட்டு வழங்கியுள்ளதாகவும், ஆனால், போட்டியிடுவதற்கு ஆள் கிடைக்காததால், காங்கிரஸ் கட்சி கார்த்தி சிதம்பரத்திற்கு சீட்டு கொடுத்துள்ளதாகவும் கூறினார். வெளிநாட்டில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் கார்த்தி சிதம்பரம், சொந்த தொகுதியில் ஒரு நிறுவனத்தை தொடங்கி, மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.  

 

தொடர்ந்து, பேசிய அவர், திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் சாயம் தற்போது வெளுத்துள்ளது என்று கூறிய அவர், டார்ச் லைட்டால் டிவியை உடைத்து வீர வசனம் பேசி கட்சியை தொடங்கினார் கமல்ஹாசன், ஆனால் டிவியை உடைக்க டார்ச் லைட்டை வீசவில்லை, டார்ச் லைட்டை உடைக்கவே வீசினார் என்பது இப்போது தான் புரிகிறது என விமர்சித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow